பொங்கல் தொகுப்பு வழங்கப்படாத மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேசன் கடைகளில் 25 ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக்கரும்பு வழங்கியதாக அறிவித்துள்ளது. மேலும், இலவச வேட்டி மற்றும் சேலைகளும் வழங்கப்பட்டது. சிலர் சொந்த ஊருக்குச் சென்று விட்டதால், அவற்றை பெறாதவர்கள் 25ம் தேதி வரை பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 85 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு, மீதமுள்ளவர்களுக்கு வழங்கும் பணியை 25ம் தேதி வரை நீட்டிக்கப்படுள்ளது.