தமிழக அரசு அறிவித்தி௫க்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் பஞ்சாப் பச்சரிசியை, வழங்க உணவு துறை முடிவு செய்துள்ளது.
ரேஷன் கடைகளில் அரிசி பிரிவில் முன்னுரிமை கார்டுதாரர்களுக்கு, ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ அரிசி; 'அந்தியோதயா' கார்டுதாரர்களுக்கு 35 கிலோ அரிசி; முன்னுரிமையற்ற கார்டுதாரர்களுக்கு அதிகபட்சம், 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இதனை மத்திய அரசின் இந்திய உணவு கழகம் ஒதுக்கீடு செய்கிறது. தமிழக அரசு, 2.19 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக, தலா 1,000 ரூபாயுடன், 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை வழங்க உள்ளது.
அதற்காக பொங்கல் பரிசில் பஞ்சாப் பச்சரிசியை வழங்க முடிவு செய்துள்ளது உணவுத்துறை. அந்த அரிசி, மத்திய தொகுப்பில் இருந்து, கிலோ 35.20 ரூபாய் விலைக்கு, 2.19 கோடி கிலோ வாங்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரம் ஜனவரி 2 முதல் ரேசன் கடைகளில் பரிசுத் தொகுப்பு விநிநோகம் தொடங்கும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.