தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு போனஸ் மற்றும் பரிசு வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 2023-2024-ம் ஆண்டிற்கான பொங்கல் போனஸ் மற்றும் பரிசு வழங்க ரூ.163.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 'சி' மற்றும் 'டி' பிரிவைச் சேர்ந்த பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் வரை மிகை ஊதியம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். தற்போது, நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் வெளியிட்ட அரசாணையின் படி, 'சி' மற்றும் 'டி' பிரிவினருக்கு ரூ.500 பொங்கல் பரிசு வழங்கப்படும். இந்த பரிசு தற்காலிக ஓய்வூதியம் பெறும் அனைத்து 'சி' மற்றும் 'டி' பிரிவு ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்படும்.