தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் மூலம் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கான டோக்கன் முறை இன்று முதல் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டை தாரர்களுக்கும், இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்பவர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. 9-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்கப்படும். 2.20 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு இந்த பரிசுகள் வழங்குவதற்காக, கூட்ட நெரிசலைத் தவிர்க்க வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள், பொருட்களை வாங்க வர வேண்டிய நாள் மற்றும் நேரத்தை டோக்கனில் குறிப்பிடுவார்கள். இந்த பணியை 4 நாட்களில் முடிக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், கரும்பு மற்றும் மற்ற பொருட்கள் தரமானவையாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் வழிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.