பொங்கல் பரிசுத்தொகை ரூ.1,000  - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

December 23, 2022

பொங்கல் பரிசுத்தொகை ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழக அரசு சார்பில் அனைத்து வகை அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 19-ந்தேதி ஆலோசனை கூட்டம் […]

பொங்கல் பரிசுத்தொகை ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழக அரசு சார்பில் அனைத்து வகை அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 19-ந்தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதுதொடர்பாக தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கிட முடிவு செய்யப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை வருகிற 2-ந்தேதி சென்னையில் தொடங்கி வைப்பார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu