பொங்கல் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

January 12, 2023

பொங்கல் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கபடுகிறது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கி வேலை செய்வோர் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில், தமிழக அரசு இன்று முதல் 14ம் தேதி வரை சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. இன்று சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 651 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. நாளை 1,856 பேருந்துகளும்; நாளை மறுநாள் 1,943 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மூன்று நாட்களிலும் 4,449 சிறப்பு பேருந்துகள் உட்பட 10, 632 […]

பொங்கல் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கபடுகிறது.

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கி வேலை செய்வோர் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில், தமிழக அரசு இன்று முதல் 14ம் தேதி வரை சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. இன்று சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 651 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. நாளை 1,856 பேருந்துகளும்; நாளை மறுநாள் 1,943 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மூன்று நாட்களிலும் 4,449 சிறப்பு பேருந்துகள் உட்பட 10, 632 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மற்ற நகரங்களில் இருந்து இன்று 1,508; நாளை, 2,214; நாளை மறுநாள் 2,461 என 6,183 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன இதற்கான 'டிக்கெட்' முன்பதிவு www.tnstc.in என்ற இணையதளம்; tnstc official app எனும் 'மொபைல்போன்' செயலியில் மேற்கொள்ளலாம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu