முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதனை எதிர்த்து பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி அமைச்சர் பொன்முடி மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருக்கோவிலூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதன் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு முதலமைச்ச மு.க ஸ்டாலின் கடிதம் எழுத உள்ளார்.