2025-ல் பூந்தமல்லி-போரூர் சேவை தொடக்கம்

February 14, 2025

சென்னை மெட்ரோ பணிகள் வேகமாக முன்னேற்றம்: 2025-ஆம் ஆண்டு பூந்தமல்லி-போரூர் சேவை தொடங்கப்படும். சென்னை அடையாற்று மேம்பாலம் அருகே நடைபெறும் மெட்ரோ பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இந்த குறித்து, அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: "கலைஞர் தலைமையில் தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ பணிகள், தற்போது நமது திராவிட மாடல் அரசில் வேகமாக முன்னேற்றம் காண்கின்றன. முந்தைய ஆட்சியின் தாமதங்களுக்குப் பிறகு, இரண்டாம் கட்ட பணிகளை இந்தியாவிலேயே முதன்மையாக மாநில நிதியுடன் முன்னெடுத்தோம். […]

சென்னை மெட்ரோ பணிகள் வேகமாக முன்னேற்றம்: 2025-ஆம் ஆண்டு பூந்தமல்லி-போரூர் சேவை தொடங்கப்படும்.

சென்னை அடையாற்று மேம்பாலம் அருகே நடைபெறும் மெட்ரோ பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இந்த குறித்து, அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

"கலைஞர் தலைமையில் தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ பணிகள், தற்போது நமது திராவிட மாடல் அரசில் வேகமாக முன்னேற்றம் காண்கின்றன. முந்தைய ஆட்சியின் தாமதங்களுக்குப் பிறகு, இரண்டாம் கட்ட பணிகளை இந்தியாவிலேயே முதன்மையாக மாநில நிதியுடன் முன்னெடுத்தோம். ஒன்றிய அரசின் ஒப்புதலுடன் பணிகள் விரைவாக முன்னேறி வருகின்றன.

2025-ஆம் ஆண்டு இறுதிக்குள் பூந்தமல்லி–போரூர் இடையேயான மெட்ரோ சேவை தொடங்கப்படும். இதனுடன் மீதமுள்ள பணிகள் குறித்த காலக்கெடுவே நிறைவேற்றப்படும். செயல்படுத்தப்படும் இந்த மெட்ரோ திட்டம் இந்தியாவில் நகரப்பொது போக்குவரத்தில் புதிய தரங்களை நிறுவும். மேலும் கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கான மெட்ரோ சேவைக்கு விரைந்து ஒப்புதல் வழங்கப்பட வேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுக்கிறேன்."

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu