போப் பிரான்சிஸ் மறைவு: மத்திய அரசு 3 நாட்கள் தேசிய துக்கம் அறிவிப்பு

April 22, 2025

போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ், சுவாசக் கோளாறு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது உடல் ரெடெம்ப்போரிஸ் தேவாலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அவரது மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு 3 நாட்கள் தேசிய துக்கம் அறிவித்துள்ளதுடன், தமிழக அரசு இன்று, நாளை மற்றும் இறுதிச்சடங்கு நடைபெறும் நாளன்று துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழக […]

போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ், சுவாசக் கோளாறு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது உடல் ரெடெம்ப்போரிஸ் தேவாலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அவரது மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு 3 நாட்கள் தேசிய துக்கம் அறிவித்துள்ளதுடன், தமிழக அரசு இன்று, நாளை மற்றும் இறுதிச்சடங்கு நடைபெறும் நாளன்று துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழக சட்டசபையில் அவருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. சமூக நலன் சார்ந்த மாற்றங்களை முன்னெடுத்த வல்லமைமிக்க தலைவர் என சட்டசபையில் புகழாரம் புனையப்பட்டது. பின்னர் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu