அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் நீர்வழி போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
பால்டிமோர் ஆற்றுப்பாலத்தில் பிரம்மாண்ட சரக்கு கப்பல் மோதி நீர்வழி போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அந்த விபத்துக்கு பிறகு உடைந்த பாலத்தின் சிதறல்கள் முழுமையாக அகற்றப்பட்டு அந்த நீர்வழி தடம் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இலங்கையை நோக்கி சென்று கொண்டிருந்த டாலி என்ற சரக்கு கப்பல் பால்டிமோர் நகரில் உள்ள படாப்ஸ்கோ நதி வழியாக சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் மோதியது. இதில் அந்த பாலம் இடிந்து விழுந்து ஆறு கட்டுமான பணியாளர்கள் பலியாகினர். இந்நிலையில் பாலத்தின் இடுப்பாடுகளை அகற்றி பாதையை சுத்தப்படுத்தும் பணி நிறைவடைந்ததால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அந்த நீர்வழிதடத்தை மீண்டும் திறந்துள்ளனர்.














