மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு

January 27, 2023

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 2.67 கோடி மின் நுகர்வோர்களின் ஆதாரை இணைக்கும் பணி நவம்பர் 15-ந் தேதி தொடங்கியது. இதற்கு டிசம்பர் 31-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. இதற்காக 2,811 பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து கால அவகாசம் ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. நேற்று வரை 2 கோடியே 11 லட்சம் பேரின் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. ஆதார் […]

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 2.67 கோடி மின் நுகர்வோர்களின் ஆதாரை இணைக்கும் பணி நவம்பர் 15-ந் தேதி தொடங்கியது. இதற்கு டிசம்பர் 31-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. இதற்காக 2,811 பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து கால அவகாசம் ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. நேற்று வரை 2 கோடியே 11 லட்சம் பேரின் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. ஆதார் இணைக்காதவர்களின் வீடுகளுக்கு சென்று மின் ஊழியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மின் வாரிய உயர் அதிகரிகள் கூறுகையில், இன்னும் சிலர் இணைக்காமல் இருப்பதால் மேலும் சில நாட்கள் அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு உள்ளது. இதற்கான அறிவிப்பை அமைச்சர் 30-ந் தேதி வெளியிடுகிறார். மின் கட்டணம் செலுத்தும்போது அவர்களின் ஆதார் எண் கேட்டு பதிவு செய்யப்படும். எனவே இணைக்காத மின் நுகர்வோர்கள் விரைவில் இணைத்து மின்சார வாரியத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu