வீடுகளில் பார்சலை பெற்று உரியவரிடம் சேர்க்க அஞ்சல் துறை, ரயில்வே கூட்டு

January 13, 2023

வீடுகளில் பார்சலை பெற்று உரியவரிடம் சேர்க்கும் முறையை அஞ்சல் துறை மற்றும் ரயில்வே இணைந்து செயல்படுத்த உள்ளது. இந்திய அஞ்சல் துறை மற்றும் ரயில்வே துறை இணைந்து கூட்டு பார்சல் விநியோக முறையைத் தொடங்கி உள்ளது. 35 கிலோவுக்கு மேற்பட்ட எடையிலான பார்சலை வாடிக்கையாளரின் இருப்பிடத்தில் இருந்து பெற்று, ரயில் நிலையத்துக்கு அனுப்பப்படும். பின்னர் ரயிலில் பார்சல் எடுத்து சென்று குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் இறக்கப்படும். அந்த ரயில் நிலையத்திலிருந்து, அதனைப் பெற்று வாடிக்கையாளரின் இருப்பிடத்துக்கே கொண்டு […]

வீடுகளில் பார்சலை பெற்று உரியவரிடம் சேர்க்கும் முறையை அஞ்சல் துறை மற்றும் ரயில்வே இணைந்து செயல்படுத்த உள்ளது.

இந்திய அஞ்சல் துறை மற்றும் ரயில்வே துறை இணைந்து கூட்டு பார்சல் விநியோக முறையைத் தொடங்கி உள்ளது. 35 கிலோவுக்கு மேற்பட்ட எடையிலான பார்சலை வாடிக்கையாளரின் இருப்பிடத்தில் இருந்து பெற்று, ரயில் நிலையத்துக்கு அனுப்பப்படும். பின்னர் ரயிலில் பார்சல் எடுத்து சென்று குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் இறக்கப்படும். அந்த ரயில் நிலையத்திலிருந்து, அதனைப் பெற்று வாடிக்கையாளரின் இருப்பிடத்துக்கே கொண்டு விநியோகம் செய்யும் பணியை அஞ்சல் துறை மேற்கொள்ளும்.

இச்சேவையை பெற விரும்புவோர் உதவி இயக்குநர், (வர்த்தக மேம்பாடு) சென்னை நகர பிராந்தியத்தில் உள்ள உதவி இயக்குநரை அணுகலாம். அல்லது 044 -2859 4761,044 -2859 4762 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் bd.chennaicity@indiapost.gov.in என்ற இணையதளத்தைக் காணலாம். இத்தகவலை சென்னை நகர தலைமை அஞ்சல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu