தமிழ்நாட்டில் தபால் வாக்குப்பதிவு தொடக்கம்

தமிழகத்தில் தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒரே கட்டமாக நடைபெறும் இந்த வாக்குப் பதிவில், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிமையான வாக்குப்பதிவை உறுதி செய்ய, தபால் ஓட்டு பதிவு தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்குகளை பெற்று வருகின்றனர். தேர்தல் ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தனி குழு இந்த பணிகளில் […]

தமிழகத்தில் தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒரே கட்டமாக நடைபெறும் இந்த வாக்குப் பதிவில், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிமையான வாக்குப்பதிவை உறுதி செய்ய, தபால் ஓட்டு பதிவு தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்குகளை பெற்று வருகின்றனர். தேர்தல் ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தனி குழு இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளது. திருவாரூர், ஈரோடு, தர்மபுரி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் நாளை முதல் தபால் வாக்குப்பதிவு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu