வரும் பொங்கல் பண்டிகை முதல் பொதிகை தொலைக்காட்சி DD தமிழ் என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.
பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சிகள் மக்கள் ரசித்து வருகின்றனர். தற்போது DD பொதிகை தொலைக்காட்சியில் சினிமா நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளது. இதில் விவாத நிகழ்ச்சிகள் உட்பட்ட புதிய நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. மேலும் வரும் பொங்கல் பண்டிகை முதல் பொதிகை தொலைக்காட்சி DD தமிழ் என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களின் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.














