போற்றிப் பாடும் அனைவருக்கும் புகழ் அருளும் போகர் சித்தர் பெருமான்:-

சித்தர்களுள் எல்லோரும் அறிந்த பெயர் போகர். தமிழ் பதிணென் சித்தர்களுள் தனி சிறப்புவாய்ந்த சித்தராகவும், இரசவாதியாகவும், மிகச்சிறந்த தத்துவ ஞானியாகவும், இருந்த சித்தர் போகர் வாழ்ந்த காலம் கி.மு.500 மற்றும் கி.மு.100க்கு இடைப்பட்ட காலமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி வைகாசி மாதத்து பரணி நட்சத்திரத்தில் பிறந்த போகரின் பிறப்பு மூலம் பற்றி பெரிதாக செய்திகள் இல்லை. ஆனால், நவசித்தர்களில் ஒருவரான காலாங்கி நாதரின் மாணவர் இவர் என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒரு செய்தியாக […]

சித்தர்களுள் எல்லோரும் அறிந்த பெயர் போகர். தமிழ் பதிணென் சித்தர்களுள் தனி சிறப்புவாய்ந்த சித்தராகவும், இரசவாதியாகவும், மிகச்சிறந்த தத்துவ ஞானியாகவும், இருந்த சித்தர் போகர் வாழ்ந்த காலம் கி.மு.500 மற்றும் கி.மு.100க்கு இடைப்பட்ட காலமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி வைகாசி மாதத்து பரணி நட்சத்திரத்தில் பிறந்த போகரின் பிறப்பு மூலம் பற்றி பெரிதாக செய்திகள் இல்லை. ஆனால், நவசித்தர்களில் ஒருவரான காலாங்கி நாதரின் மாணவர் இவர் என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒரு செய்தியாக ‘போகர் ஏழாயிரம்’ எனும் நூலின் வழி அறிய முடிகிறது. போகரின் முக்கிய சீடர் புலிப்பாணி சித்தர்.

போகர் பழனி மலை சிலை உருவாக்கிவிட்டு சீனாவிற்கு போய் "போயாங் வேய்" என்ற சீனர் உடலில் கூடு விட்டு கூடு பாய்ந்து நீண்டகாலம் வாழ்ந்தார் எனவும் அதற்கு சாட்சியாக போகர் சீன தேசத்தில் தாவோயிச கோட்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக பல ஆய்வுகள் மேற்கொண்டார். சித்த மருத்துவம், மற்றும் இரசவாத கோட்பாடுகளின் மூலமாக அந்த கருத்தியலுக்கு மேலும் வலு சேர்த்தார். அவர் சீன மொழியில் இயற்றிய கான்டொங் குய் என்னும் படைப்புகளின் வாயிலாக இதை வரலாறு நமக்கு எடுத்து கூறுகிறது.

இந்திய உணவில் எண்ணெய், கொழுப்பு சத்து, காரம், புளிப்பு, உவர்ப்பு என்றெல்லாம் பல சுவைகள் உண்டு. சீனர்களிடம் அப்படி இல்லை. அவர்களது உணவுமுறை ரஜோ குணத்தை தூண்டுவதாகவும்; எலும்பு, நரம்பு இவைகளை வலுவாக வைத்துக்கொள்ளத் தக்கதாகவும் இருந்தமையால், அவர்களிடம் பல வித்யாசமான பயிற்சி முறைகள் இருந்தன.அதில் ‘ரஜோலி’ என்னும் யோக முறையும் ஒன்று. போகர் அதை ஆர்வத்துடன் பழகிய போது அவருக்கு தலையில் அடிபட்டு அவருக்குள் அவர் பற்றிய அவ்வளவு எண்ணங்களும் மறைந்துபோன. பின்னர், அவரைத் தேடிக்கொண்டு சீனா சென்ற போகரின் மாணாக்கர்களில் ஒருவரான புலிப்பாணி, போகரின் நிலை கண்டு கலங்கி, அவரைத் தன் முதுகிலேயே சுமந்துகொண்டு இந்தியா வந்து சேர்ந்தார் என்றும் சொல்கிறார்கள்.

அதன்பின் குருவுக்கே அவரிடம் கற்றதை உபதேசித்து, அவருக்குள் மீண்டும் பழைய எண்ணங்களை தோற்றுவித்தாராம் புலிப்பாணி. அதன்பின், போகர் ஒரு புத்துயிர்ப்போடு மீண்டு எழுந்தார்.

பின் அன்னை உமையை நினைத்து தவம் செய்து அவள் அருளையும் பெற்றார்.அன்னை வாக்குப்படி பழனி மலைக்குச் சென்று தவம் செய்து முருகனை தண்டாயுதபாணியாகவே தரிசனம் செய்து, தான் தரிசித்த பாலதண்டாயுதபாணிக்கு நவபாஷாணத்தால் சிலை ஒன்றையும் உருவாக்கினார். பாஷாணங்களைக் கட்டுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல.

ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குண வகையில் இருக்கும். அவைகளை உரிய முறையில் கலந்து ஒரு பொதுவான பாஷாணம் உருவாக்கினார். அதன் மேல் பட்டு வழியும் பொருள் எதுவாயினும் அதுவும் மருத்துவ குணம் கொண்டு தீராத வியாதியை எல்லாம் தீர்த்து வைக்கும்.

போகர் செய்ததுதான் பழனிமுருகனின் மூலத் திரு உருவம். செய்து அதற்கான வழிபாட்டு முறையை உருவாக்கி நடைமுறைப்படுத்தினார்.மனிதப் பிறப்பானது கோள்களால் நிர்வகிக்கப்படுவதை உணர்ந்து அந்தக் கோள்களின் குணங்களைக் கொண்ட ஒன்பது பாஷாணத்தை தேர்வுசெய்து அதிலிருந்து தண்டாயுத பாணியை செய்து, கோள்களை ஓர் உருவத்துக்குள் அடக்கிப் பூட்டினார் போகர்.அதனால் பழனி மலை பால தண்டாயுத பாணியை எவர் வந்து தரிசித்து வணங்கினாலும் நவ கோள்களையும் ஒருசேர வணங்கிய ஒரு வாய்ப்பும் அவர்களுக்கு உண்டாகிறது என்பது ஆன்மீக நண்பர்கள் நம்பிக்கை.

போகர் பழனிக்கு பிறகு அதே மாதிரியான நவபாஷாண மூர்த்தியான திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரனை உருவாக்கினார். பின் மீண்டும் பழனிக்கே சிலகாலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். இன்றும் அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது.போகர் பூஜித்து வந்த புவனேஸ்வரி அம்மனின் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் இன்றும் உள்ளது. போகரின் சமாதி அமைந்துள்ள இடத்திற்கும் புவனேஸ்வரி அம்மன் சந்நதிக்கும் இடையே சுரங்கப் பாதை ஒன்றும் உள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலே சொன்ன தகவல் எல்லாம் சதுரகிரி தலப்புராணத்தில் கூறப்பட்டது.

போகர் தமிழில் இயற்றியதாக சுமார் 64 நூல்கள் மட்டுமே இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இவர் எழுதியதாக சுமார் 26,307 பாடல்கள் மட்டுமே கிடைக்கப்பெறுகின்றன. இதுவரை 23 நூல்கள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளன. இதன் மூலம் 11,000 பாடல்கள் வெளிவந்ததுள்ளது இன்னும் பல படைப்புகள் இருக்கிறது அவை நமக்கு கிடைக்கவில்லை என்று வரலாறு கூறுகிறது.
துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் வெடிமருத்துக்கான வேதிப்பொருட்களை முதன் முதலில் கி.மு. 142 ஆம் ஆண்டு போகர் இயற்றிய குறிப்புகளில் பதிவுசெய்திருப்பதாக ஐரோப்பிய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் போகர் எழுதிய சுவடிகள் பலவற்றை சேகரித்து சென்னை சுவடி நூலகம், தஞ்சை சரஸ்வதி மகால், சென்னை சித்தமருத்துவ மேம்பாட்டு குழு, புதுச்சேரி பிரெஞ்சு கழகம், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, கேரள பல்கலைக்கழக சுவடி மையம், ஆகிய இடங்களில் பாதுகாத்து வருகிறார்கள். அதன் மூலமும் போகர் பற்றி மேற்சொன்ன பல்வேறு தகவல்கள் நமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. போகரை போற்றிப் பாடும் அனைவருக்கும் நலம் வளம் புகழ் நிச்சயம் அருள்வார் சித்தர் போகர் பெருமான்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu