இந்தியாவின் பிப்ரவரி மாத மின் நுகர்வு 9% உயர்வு

March 2, 2023

இந்தியாவின் பிப்ரவரி மாத மின் நுகர்வு, வருடாந்திர அடிப்படையில் 9% உயர்ந்து, 117.84 பில்லியன் யூனிட்டுகளாக பதிவாகியுள்ளது. இந்நிலையில், மார்ச் மாதம், மின் நுகர்வு மற்றும் மின் தேவை ஆகிய இரண்டும் மேலும் அதிகரிக்கும் என்று துறைசார் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில், மின் நுகர்வு படிப்படியாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, 2021 பிப்ரவரி மாதத்தில், 103.25 பில்லியன் யூனிட்டுகளாக இருந்த மின் நுகர்வு, கடந்த வருட பிப்ரவரி மாதத்தில், 108.03 பில்லியன் யூனிட்டுகளாக பதிவாகி இருந்தது. நடப்பு […]

இந்தியாவின் பிப்ரவரி மாத மின் நுகர்வு, வருடாந்திர அடிப்படையில் 9% உயர்ந்து, 117.84 பில்லியன் யூனிட்டுகளாக பதிவாகியுள்ளது. இந்நிலையில், மார்ச் மாதம், மின் நுகர்வு மற்றும் மின் தேவை ஆகிய இரண்டும் மேலும் அதிகரிக்கும் என்று துறைசார் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில், மின் நுகர்வு படிப்படியாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, 2021 பிப்ரவரி மாதத்தில், 103.25 பில்லியன் யூனிட்டுகளாக இருந்த மின் நுகர்வு, கடந்த வருட பிப்ரவரி மாதத்தில், 108.03 பில்லியன் யூனிட்டுகளாக பதிவாகி இருந்தது. நடப்பு ஆண்டில் இது மேலும் அதிகரித்துள்ளது. மேலும், ஒரு நாளில் அதிகபட்சமாக ஏற்பட்டுள்ள மின் நுகர்வு, கடந்த பிப்ரவரி மாதத்தில் 209.66 ஜிகாவாட் ஆக பதிவாகியுள்ளது. இதுவே கடந்த வருட பிப்ரவரி மாதத்தில் 193.58 ஜிகாவாட் ஆகவும், 2021 பிப்ரவரியில் 187.97 ஆகவும் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. மின் நுகர்வு தொடர்ந்து அதிகரிப்பது நாட்டின் பொருளாதாரச் செயல்பாடுகளுடன் மிகவும் தொடர்புடையதாக கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu