பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனம், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 4% உயர்ந்து, 4320 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் வருவாய் 4% உயர்ந்து 12264 கோடியாக பதிவாகியுள்ளது. எனவே, நிறுவனத்தின் பொது பங்கு ஒன்றுக்கு இறுதி டிவிடெண்ட் தொகையாக 4.75 ரூபாய் வழங்க நிறுவனத்தின் வாரியம் பரிந்துரை செய்துள்ளது.
மேலும், கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், ஒட்டுமொத்தமாக, நிறுவனத்தின் நிகர லாபம் 8.4% சரிந்து, 15417.12 கோடியாக உள்ளது. மேலும், நிறுவனத்தின் வருவாய் 10% உயர்ந்து, 45581.28 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்திற்கு கிடைத்த இதர வருவாய் கடந்த காலாண்டில் 294 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டில் 381 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், நிறுவனத்தின் EBITDA மதிப்பு 17% உயர்ந்துள்ளது.














