பாகிஸ்தான் - மின் துண்டிப்பு காரணமாக பொதுமக்கள் கடும் பாதிப்பு

January 23, 2023

பாகிஸ்தானில், இன்று கிட்டத்தட்ட நாடு தழுவிய முறையில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் மின் தேவையில் மாற்றம் ஏற்பட்டதால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, அதன் காரணமாக, இன்று காலை 7:30 மணி முதல் மின்விநியோகம் சீர்குலைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தலைநகர் இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர், பெஷாவர், குவட்டா உள்ளிட்ட பல முக்கிய நகரங்களும் மின்சாரம் இன்றி தத்தளித்து வருகின்றன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சார ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டு, பயணிகள் […]

பாகிஸ்தானில், இன்று கிட்டத்தட்ட நாடு தழுவிய முறையில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் மின் தேவையில் மாற்றம் ஏற்பட்டதால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, அதன் காரணமாக, இன்று காலை 7:30 மணி முதல் மின்விநியோகம் சீர்குலைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

தலைநகர் இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர், பெஷாவர், குவட்டா உள்ளிட்ட பல முக்கிய நகரங்களும் மின்சாரம் இன்றி தத்தளித்து வருகின்றன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சார ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் இறங்கி நடந்து செல்லும் காட்சி இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக பாகிஸ்தான் எரிசக்தி துறை தெரிவித்துள்ளது. மேலும், நிலைமையை முழுமையாக சீர் செய்ய 12 மணி நேரம் வரை ஆகலாம் எனவும் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu