மின் கட்டணத்தை இனியும் குறைக்க முடியாது - மின்சார துறை அமைச்சர் 

January 7, 2023

மின் கட்டணத்தை இனியும் குறைக்க முடியாது என்று மின்சார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றபோது மின் வாரியத்துக்கு 1.59 லட்சம் கோடி கடன் இருந்தது. ஆண்டுக்கு வட்டியாக மட்டும் 16 ஆயிரத்து 511 கோடி செலுத்தினோம். இதையடுத்து, வட்டி குறைப்பு நடவடிக்கையால் ஆண்டுக்கு 2200 கோடி ரூபாயை மிச்சப்படுத்தினோம். கட்டண உயர்வு வாயிலாக ஆண்டுக்கு 19 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு […]

மின் கட்டணத்தை இனியும் குறைக்க முடியாது என்று மின்சார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றபோது மின் வாரியத்துக்கு 1.59 லட்சம் கோடி கடன் இருந்தது. ஆண்டுக்கு வட்டியாக மட்டும் 16 ஆயிரத்து 511 கோடி செலுத்தினோம். இதையடுத்து, வட்டி குறைப்பு நடவடிக்கையால் ஆண்டுக்கு 2200 கோடி ரூபாயை மிச்சப்படுத்தினோம். கட்டண உயர்வு வாயிலாக ஆண்டுக்கு 19 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தொழில் துறையினர் வர்த்தகர்கள் என பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளை ஏற்று கட்டணம் ஓரளவு குறைக்கப்பட்டது. இந்தக் கட்டண உயர்வால் தற்போது ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடி வருவாய் வரும் என எதிர்பார்க்கிறோம். இதற்கு மேலும் கட்டணத்தைக் குறைத்தால் நிலைமை மோசமாகி விடும் என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu