பாகிஸ்தானில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

March 22, 2023

பாகிஸ்தானில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. சில நொடிகள் பூமி குலுங்கியதால் மிகப் பெரிய அளவில் அதிர்வு உணரப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இதன் தாக்கம் இஸ்லாமாபாத், லாகூர், ராவல்பிண்டி மற்றும் பெஷாவர் உள்ளிட்ட நகரங்களிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து சுமார் 184 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 9 […]

பாகிஸ்தானில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.

சில நொடிகள் பூமி குலுங்கியதால் மிகப் பெரிய அளவில் அதிர்வு உணரப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இதன் தாக்கம் இஸ்லாமாபாத், லாகூர், ராவல்பிண்டி மற்றும் பெஷாவர் உள்ளிட்ட நகரங்களிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து சுமார் 184 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர். மேலும் 6 பேர் காயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu