அர்ஜென்டினா அருகே கடலின் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
தென் அமெரிக்காவை ஒட்டியுள்ள அர்ஜென்டினா அருகே கடலின் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவீட்டில் 7.4 என்ற மிக உயர் அளவிலான இந்த நிலநடுக்கம் கடலடி பகுதிகளில் ஏற்பட்டுள்ளதால், அதனாலான அதிர்வுகள் கடற்கரை பகுதிகளுக்கு விரைவாக கடந்து செல்லக்கூடியவையாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலநடுக்கத்தால் சிலிக்கு உட்பட்ட மாகல்லனேஸ் பகுதிகளில் உள்ள கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்போது வரை அர்ஜென்டினாவில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்தவொரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை.