பசிபிக் பெருங்கடலில் உள்ள நியூ கலிடோனியா தீவை இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் உலுக்கியது.
இந்த நில நடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.7 புள்ளிகளாக இது பதிவானதாக அமெரிக்க நிலநடுக்கவியல் துறை தெரிவித்து உள்ளது. நில நடுக்கத்தையடுத்து நியூ கலிடோனியா மற்றும் பிஜூ தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.