ரஷ்யாவில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரஷ்யாவின் உள்ள கம்சட்கா கடற்கரையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை கம்சாட்சிக்கு கிழக்கே சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் 50 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தையடுத்து லேசான நில அதிர்வுகள் பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பாதுகாப்பான இடம் தேடி சென்றனர். இங்கு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பாதிப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர் என்றபோதிலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதாரங்கள் குறித்து இதுவரை தகவல் ஏதும் வெளியாகவில்லை.