பிலிப்பைன்சின் தெற்குப் பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டாவோ தீவின் கிழக்கே சுமார் 374 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உருவானது. ரிக்டர் அளவுகோலில் இதன் தாக்கம் 6.3 என பதிவானது.
நிலநடுக்கத்தை உணர்ந்ததும் பயந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இயற்கை பேரழிவாக இருந்தாலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இதுவரை எந்தவொரு உயிர் சேதத்தும் அல்லது உடைமைகள் சேதமடைந்ததையும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை.