நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

February 15, 2023

நியூசிலாந்து நாட்டில் இன்று 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி, இரவு 7:38 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வெலிங்டன் நகருக்கு உட்பட்ட லோயர் ஹட் நகரின் வடகிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக. பராபரமூவிலிருந்து வடமேற்கே 50 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்ததாக கூறப்படுகிறது. மேலும், பூமியிலிருந்து சுமார் 48 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப் பகுதி இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது. அண்மையில் கேப்ரியல் புயலால் கடும் […]

நியூசிலாந்து நாட்டில் இன்று 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி, இரவு 7:38 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வெலிங்டன் நகருக்கு உட்பட்ட லோயர் ஹட் நகரின் வடகிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக. பராபரமூவிலிருந்து வடமேற்கே 50 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்ததாக கூறப்படுகிறது. மேலும், பூமியிலிருந்து சுமார் 48 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப் பகுதி இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

அண்மையில் கேப்ரியல் புயலால் கடும் பாதிப்பை சந்தித்த நியூசிலாந்து, அதிலிருந்து மீண்டு வருவதற்குள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கத்தால் சுமார் 60000 மக்கள் பாதிப்படைந்ததாக கூறப்படுகிறது. நில அதிர்வுகள் உணரப்பட்டதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, சாலைகள் மற்றும் திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu