ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதி ஆவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து உள்ளன என்று அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
பாகிஸ்தானில் கடந்த எட்டாம் தேதி பொது தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க பாகிஸ்தான் மக்கள் கட்சி ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முக்கிய தலைவரான ஆசிப் அலி சர்தார் ஜனாதிபதி ஆவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து உள்ளன என்று அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
ஆசிப் அலி சர்தாரிக்கு வயது 68. இவர் 2008 முதல் 2013 வரை ஜனாதிபதியாக பதவியில் இருந்தார். இவருடைய கட்சியும் பாகிஸ்தான் முஸ்லிம் நவாஸ் கட்சியும் கூட்டணி அமைத்து பெரும்பான்மையை நிரூபித்தால் ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராகவும், சர்தார் அதிபராகவும் வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.