பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி 3-வது சுற்றில் பிரக்ஞானந்தா டாய் வென்னை வீழ்த்தி முன்னேறினார்.
பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக் குடியரசில் நடந்து வருகிறது. 9 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா மற்றும் அரவிந்த் சிதம்பரம் உள்ளிட்ட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், 3-வது சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, செக் குடியரசு வீரர் டாய் வென்னை சந்தித்து, வெற்றிபெற்றார். இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. பிரக்ஞானந்தா, முதல் இரண்டு ஆட்டங்களில் டிரா செய்திருந்தார், ஆனால் இப்போது வெற்றியடைந்து முன்னேறினார்.