சந்திராயன் -3 விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவல் அனுப்பப்பட்டது. இது நேற்று வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ததற்காக அனுப்பப்பட்ட சந்திராயன்-3 விண்கலம் தனது இலக்கை 41 நாட்கள் பயணம் செய்து அடைந்துள்ளது. இது நேற்று மாலை 6:04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.
நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய பின் இதன் அடுத்த கட்டமான பிராக்யான் ரோவர் வெளியேற்றும் பணியை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். இதில் விக்ரம் லேண்டரில் இருந்து ரோவர் வெளியேறியது. சில மணி நேரங்களுக்கு பின் நிலவில் ரோவர் தடம் பதித்தது. ரோவர் அங்கே உருண்டோடி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளது. 14 நாட்கள் பல்வேறு ஆய்வுகளை நிலவின் தரைப்பகுதியில் ரோவர் மேற்கொள்ளும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.