நிலவில் சல்ஃபர், அலுமினியம் போன்ற பல்வேறு தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளது.
நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3-இன் விக்ரம் லேண்டர் கடந்த 23ஆம் தேதி தரை இறங்கியது. இதனை அடுத்து லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளிவந்தது. அது அங்கு 16 நாட்களுக்கு ஆய்வு பணியை மேற்கொள்ளும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது. முதல் கட்டமாக பல்வேறு புகைப்படங்களை அது எடுத்து அனுப்பியுள்ளது. நிலவின் வெப்பநிலையை விக்ரம் லேண்டர் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதற்காக அதில் 10 சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அனுப்பி உள்ளது.
இந்நிலையில், நிலவின் தென் துருவத்தில் ஆக்ஸிஜன் இருப்பதை ரோவர் உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் சல்ஃபர், அலுமினியம் போன்ற பல்வேறு தனிமங்கள் இருப்பதை அது உறுதி செய்துள்ளது. அதோடு நைட்ரஜன் இருக்கிறதா என்பதை கண்டு அறிவதற்காக ஆய்வு நடைபெற்று வருகிறது என இஸ்ரோ அறிவித்திருக்கிறது. பிரக்யான் ரோவரில் லேசர் இண்யூஸ்ட் பிரேக் டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் என்ற கருவி நிலவில் தனிமங்கள் இருப்பதை கண்டறிந்து உறுதிப்படுத்தி உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.