இந்திய ராணுவத்திற்கான ஆயுத உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் டி.ஆர்.டி.ஓ., இன்று ஒடிசா கடற்கரையில் பிரளய் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது.
பிரளய் என்பது குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையாகும். இது 150 முதல் 500 கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் திறன் பெற்றது. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, பாரத் டைனமிக்ஸ் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களின் ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்டது. ஒடிசா மாநிலத்தின் அப்துல் கலாம் தீவிலிருந்து இன்று நடைபெற்ற சோதனை வெற்றிகரமாக நிறைவேறியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.