இந்திய பேட்மிட்டன் வீரர் பிரணாய் ஜப்பான் மாஸ்டர் தொடரில் தோல்வி அடைந்து வெளியேறினார்.சீன தைபெயின் சௌ தியேன் சென்னுடன் வியாழக்கிழமை ஜப்பான் மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பேட்மிட்டன் தொடர் நடைபெற்றது. இதில் இந்திய வீரர் ஹெச்.எஸ் பிரணாய் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் தோல்வியடைந்து வெளியேறினார். இதற்கு முன்னதாக பிரணாய் ஆசிய போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றுள்ளார். மேலும் உலகின் பன்னிரண்டாம் நிலை வீரரான தியென் சென்னுடன் 73 நிமிட போட்டியில் தோல்வியுற்றார். உலகத் தரவரிசையில் இவர் எட்டாவது இடத்தில் இருக்கின்றார். இதன் முதல் சுற்றில் நடைபெற்ற போட்டியில் நிதானமாக விளையாடி 4- 0 என முன்னிலை வகித்து வந்தார். இடைவெளியின் போது 11-8 என்று முன்னிலையில் இருந்தார். அடுத்த ஆட்டத்தில் சீன வீரர் 5-0 என முன்னிலை பெற்றார். மேலும் தொடர்ந்த ஆட்டத்தில் சீன வீரர் 12-4 என தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். பின்னர் புள்ளிகளை சீராக உயர்த்தி 19-19என்ற நிலையில் சமநிலைக்கு வந்தார். இருந்தபோதிலும் சீன வீரர் 2 புள்ளிகளை கைப்பற்றி 21-9 என்ற கணக்கில் பிரணாயை வீழ்த்தினார்.