என்டிடிவி தோற்றுநர்கள் பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ராஜினாமா

November 30, 2022

என்டிடிவியின் 29.18% பங்குகளை அதானி குழுமம் பெற்றுள்ளதாக திங்கட்கிழமை பங்குச்சந்தை அறிக்கை தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, என்டிடிவியின் தோற்றுநர்கள் பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. புதிய நிர்வாகிகளாக சுதிப்தா பட்டாச்சார்யா, சஞ்சய் புகலியா மற்றும் செந்தில் சின்னையா செங்கல்வராயன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம், என்டிடிவியின் 29.18% பங்குகளை கைப்பற்றியதாக அதானி குழுமம் தெரிவித்தது. பின்னர், அக்டோபர் மாதத்தில் என்டிடிவியின் கூடுதல் 26% […]

என்டிடிவியின் 29.18% பங்குகளை அதானி குழுமம் பெற்றுள்ளதாக திங்கட்கிழமை பங்குச்சந்தை அறிக்கை தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, என்டிடிவியின் தோற்றுநர்கள் பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. புதிய நிர்வாகிகளாக சுதிப்தா பட்டாச்சார்யா, சஞ்சய் புகலியா மற்றும் செந்தில் சின்னையா செங்கல்வராயன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம், என்டிடிவியின் 29.18% பங்குகளை கைப்பற்றியதாக அதானி குழுமம் தெரிவித்தது. பின்னர், அக்டோபர் மாதத்தில் என்டிடிவியின் கூடுதல் 26% பங்குகளை வாங்க முன் வருவதாக பங்குச்சந்தையில் தெரிவித்தது. இந்நிலையில், தற்போது, டிசம்பர் 5 தேதி வரை என்டிடிவியின் 26% பங்குகளுக்கு, அதானி குழுமம் வெளிப்படை சலுகையை அறிவித்துள்ளது. ஒரு பங்கு விலை 294 ரூபாய்க்கு விற்க உள்ளதாக கூறியுள்ளது. தற்போதைய நிலையில், என்டிடிடிவியின் பங்குகள் 425.05 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu