யப் டிவியுடன் இணைந்து ஓடிடியில் களமிறங்க பிரசார் பாரதி திட்டம்

January 7, 2023

இந்தியாவின் ஒளிபரப்பு தளம் -பிரசார் பாரதி, யப் டிவியுடன் கடந்த மார்ச் மாதத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி, தூர்தர்ஷனை ஓடிடியில் களமிறக்குவதற்கான வாய்ப்புகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவின் தூர்தர்ஷன், அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகளில் ஒளிபரப்பாக திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்திய அரசு, சுமார் 2500 கோடி ரூபாய் மதிப்பில், தூர்தர்ஷன் மேம்பாட்டு திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி, “தற்போது 16 சேனல்கள் ஆக உள்ள […]

இந்தியாவின் ஒளிபரப்பு தளம் -பிரசார் பாரதி, யப் டிவியுடன் கடந்த மார்ச் மாதத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி, தூர்தர்ஷனை ஓடிடியில் களமிறக்குவதற்கான வாய்ப்புகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவின் தூர்தர்ஷன், அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகளில் ஒளிபரப்பாக திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்திய அரசு, சுமார் 2500 கோடி ரூபாய் மதிப்பில், தூர்தர்ஷன் மேம்பாட்டு திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி, “தற்போது 16 சேனல்கள் ஆக உள்ள தூர்தர்ஷனின் டிஷ் திறன், 250 சேனல்களாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு அதிக சேனல்கள் இலவசமாக ஒளிபரப்பப்படும். மேலும், தூர்தர்ஷனின் 28 மண்டல சேனல்கள் எச்டி தரத்தில் தரம் உயர்த்தப்படும். மேலும், இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள ஒளிபரப்பு நிலையங்கள் புனரமைக்கப்பட்டு, தரம் உயர்த்தப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu