பிரசார் பாரதியின் டிரான்ஸ்மிட்டர்களை 2539 கோடியில் மேம்படுத்தும் திட்டம் அறிவிப்பு

January 7, 2023

இந்தியாவின் தேசிய ஒலிபரப்பு தளமான பிரசார் பாரதி, இந்தியா - நேபால் எல்லை மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில், நலிவடைந்த நிலையில் உள்ள டிரான்ஸ்மிட்டர்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான மதிப்பு 2539 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் பல பகுதிகளில் டிரான்ஸ்மிட்டர் சேவைகளை விரிவாக்கம் செய்யவும் இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் இந்த திட்டம் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசார் பாரதியின் கீழ், ஆல் இந்தியா ரேடியோ […]

இந்தியாவின் தேசிய ஒலிபரப்பு தளமான பிரசார் பாரதி, இந்தியா - நேபால் எல்லை மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில், நலிவடைந்த நிலையில் உள்ள டிரான்ஸ்மிட்டர்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான மதிப்பு 2539 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் பல பகுதிகளில் டிரான்ஸ்மிட்டர் சேவைகளை விரிவாக்கம் செய்யவும் இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் இந்த திட்டம் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரசார் பாரதியின் கீழ், ஆல் இந்தியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷன் ஆகியவை இயங்கி வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, நம்ப தகுந்த ஒளிபரப்பு ஊடகங்களாக இவை திகழ்கின்றன. எனவே, இதனை மேம்படுத்த இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக கௌரவ் திவேதி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்காக பல தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் பொறியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த திட்டத்தின் மூலம், ஆல் இந்தியா ரேடியோவின் பிரிகுவன்சி கவரேஜ் 58.83 சதவீதத்திலிருந்து 66.29% ஆக உயர்த்தப்படுகிறது. மேலும், இந்தியா - நேபால் எல்லையில் 63.02% மற்றும் ஜம்மு காஷ்மீரில் 76% ஆக பிரிகுவன்சி கவரேஜ் மேம்படுத்தப்பட உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu