மனிதர்களைப் போல கர்ப்பம் தரித்து குழந்தை பெறும் ரோபோக்களை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.
சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானி டாக்டர் ஜாங் கெஃபெங் தலைமையிலான குழு, செயற்கை கருப்பையுடன் கூடிய உலகின் முதல் “கர்ப்ப ரோபோவை” உருவாக்கி வருகிறது. அம்னோடிக் திரவம் நிரம்பிய இந்த கருப்பை, மனித கருப்பையைப் போலவே செயல்பட்டு, கருத்தரித்தல் முதல் பிரசவம் வரை முழுமையான செயல்முறையையும் நடத்தும் திறன் கொண்டது. குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் குழாய்களின் மூலம் வழங்கப்படுகின்றன. முன்னர் ஆட்டுக்குட்டி பிறந்த “பயோ பேக்” தொழில்நுட்பத்தை மேம்படுத்தியே இத்திட்டம் உருவாகியுள்ளது. இந்த ரோபோவின் மாதிரி அடுத்த ஆண்டுக்குள் தயாராகும் என்றும், இதற்கான செலவு சுமார் ரூ. 12.96 லட்சம் ஆகும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.














