மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் அச்சடிக்கும் முன் அல்வா கிண்டி அனைவருக்கும் வழங்கினார்.
ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன் அச்சடிக்கும் வேலை தொடங்கும்போது சம்பிரதாய படி இனிப்பு பொருள் தயாரித்து இது தொடர்பான பணிகளில் ஈடுபவர்களுக்கு வழங்குவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள நிதி துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் மத்திய நிதி மந்திரிநிர்மலா சீதாராமன் முன்னிலையில் அல்வா தயாரிக்கப்பட்டு இன்று அனைவருக்கும் வழங்கப்பட்டது.