ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 18-ந்தேதி தமிழகம் வருகை

March 15, 2023

ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 18-ந்தேதி தமிழகம் வருகிறார். ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒருநாள் பயணமாக வரும் 18ந் தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 18-ந்தேதி காலை திருவனந்தபுரத்திற்கு வரும் அவர், அங்கிருந்து விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் வந்திறங்குகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு செல்லும் ஜனாதிபதி, தனி படகு மூலம் […]

ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 18-ந்தேதி தமிழகம் வருகிறார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒருநாள் பயணமாக வரும் 18ந் தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 18-ந்தேதி காலை திருவனந்தபுரத்திற்கு வரும் அவர், அங்கிருந்து விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் வந்திறங்குகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு செல்லும் ஜனாதிபதி, தனி படகு மூலம் விவேகானந்தா கேந்திராவிற்கு செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, மீண்டும் கார் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரத்திற்கு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu