மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல்

September 30, 2023

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவினை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதி இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். சமீபத்தில் நடந்த பாராளுமன்ற சிறப்பு கூட்ட தொடரில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு ஜனநாயக கூட்டணி கட்சிகள் மட்டும் இன்றி காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறியது. மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் […]

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவினை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதி இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த பாராளுமன்ற சிறப்பு கூட்ட தொடரில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு ஜனநாயக கூட்டணி கட்சிகள் மட்டும் இன்றி காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறியது. மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையரைக்கு பின் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கு பிற்படுத்தப்பட்ட பிரிவுகளுக்கு ஒதுக்கீடு வழங்க வழி செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தின. இதைnஅமல் படுத்தவும் காங்கிரஸ் கட்சிகள் கேட்டுக் கொண்டதை அடுத்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu