அல்ஜீரிய ஜனாதிபதியுடன் வர்த்தகம் குறித்து ஜனாதிபதி முர்மு ஆலோசனை

October 15, 2024

அல்ஜீரிய ஜனாதிபதியுடன் வர்த்தகம் குறித்து ஜனாதிபதி முர்மு ஆலோசனை நடத்தினார். அல்ஜீரியா, மொரிடேனியா மற்றும் மலாவி ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சுற்றுப்பயணத்தில் உள்ளார். இதில், அல்ஜீரியாவின் அல்ஜீர்ஸ் நகரில் அவர் வரவேற்கப்பட்டார். அந்நாட்டு ஜனாதிபதி அப்தில் மஜித் திபவுன் மற்றும் அவரது மந்திரிகள் ஜனாதிபதி முர்முவை வரவேற்றனர். இரண்டு தலைவரும் எல் மவுராடியா அரண்மனையில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினர். இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கைகளை உறுதி செய்தனர். […]

அல்ஜீரிய ஜனாதிபதியுடன் வர்த்தகம் குறித்து ஜனாதிபதி முர்மு ஆலோசனை நடத்தினார்.

அல்ஜீரியா, மொரிடேனியா மற்றும் மலாவி ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சுற்றுப்பயணத்தில் உள்ளார். இதில், அல்ஜீரியாவின் அல்ஜீர்ஸ் நகரில் அவர் வரவேற்கப்பட்டார். அந்நாட்டு ஜனாதிபதி அப்தில் மஜித் திபவுன் மற்றும் அவரது மந்திரிகள் ஜனாதிபதி முர்முவை வரவேற்றனர். இரண்டு தலைவரும் எல் மவுராடியா அரண்மனையில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினர். இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கைகளை உறுதி செய்தனர். ஜனாதிபதி முர்மு, அல்ஜீரியாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அப்தில் மஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். பேச்சுவார்த்தையின்போது வர்த்தகம் மற்றும் முதலீட்டில் சிறப்பு கவனம் செலுத்தினர். ஆப்பிரிக்காவுக்கான உறுதியான ஆதரவையும், வலுவான ஈடுபாட்டையும் முர்மு உறுதிப்படுத்தினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu