ஐ.நா. பொதுச்சபைத் தலைவா் இன்று இந்தியா வருகிறார்

January 22, 2024

ஐநா பொது சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சஸ் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வர உள்ளார். ஐநா சபைத் தலைவரின் பயணத்தின் போது பாதுகாப்பு கவுன்சிலில் நிலுவையில் உள்ள சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்படுவதாவது, ஐநா பொது சபை தலைவர் டென்னிஸ் பிரான்சஸ் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது இந்தியா, ஐ.நா இடையேயான உறவை […]

ஐநா பொது சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சஸ் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வர உள்ளார்.

ஐநா சபைத் தலைவரின் பயணத்தின் போது பாதுகாப்பு கவுன்சிலில் நிலுவையில் உள்ள சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்படுவதாவது, ஐநா பொது சபை தலைவர் டென்னிஸ் பிரான்சஸ் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது இந்தியா, ஐ.நா இடையேயான உறவை அவர் பலப்படுத்துவார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் அவர் பலதர பிரச்சனைகளை குறித்து ஆலோசனை நடத்துவார். குறிப்பாக, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக வளரும் நாடுகளை சேர்ப்பது உள்ளிட்ட பல சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். அதோடு தெற்குலக நாடுகள் சந்தித்து வரும் சவால்கள் குறித்தும் விவாதிக்கப்படும். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் அவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu