பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்ட மசோதா இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வந்தது. இதில் மணிப்பூர் விவகாரம், எதிர்க்கட்சிகளின் அமளி என்று பல விவாதங்கள் நடைபெற்று வந்த போதிலும் மத்திய அரசு பல மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது.
அதில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் மசோதா மக்களவையில் 7ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து மாநிலங்களவையில் 9ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.