ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற மாநில சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2019 அக்டோபர் 31-ம் தேதி, ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி 42 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 6, பாஜக 29, மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி 3 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இதனை தொடர்ந்து புதிய முதலமைச்சராக ஒமர் அப்துல்லா பதவியேற்க உள்ளார். மேலும் அவர், துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்து, எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கியுள்ளார். இந்நிலையில் அங்கு நிலவி வந்த குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.














