பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் நிறுவனம், காலாண்டு லாபத்தில் 80% உயர்வை பதிவு செய்துள்ளது

November 12, 2022

பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் நிறுவனம் காலாண்டு லாபத்தில் 80% உயர்வை பதிவு செய்துள்ளது. செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 140.7 கோடி ரூபாயாக பதிவாகி உள்ளது. இதுவே கடந்த வருட செப்டம்பர் மாதத்தில், 78.3 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் நிறுவனத்தின் வருவாய் 1474.7 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. முந்தைய ஆண்டில் இது 1345.2 கோடியாக பதிவாகி இருந்தது. மேலும், வருடாந்திர அடிப்படையில், விற்பனை […]

பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் நிறுவனம் காலாண்டு லாபத்தில் 80% உயர்வை பதிவு செய்துள்ளது. செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 140.7 கோடி ரூபாயாக பதிவாகி உள்ளது. இதுவே கடந்த வருட செப்டம்பர் மாதத்தில், 78.3 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் நிறுவனத்தின் வருவாய் 1474.7 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. முந்தைய ஆண்டில் இது 1345.2 கோடியாக பதிவாகி இருந்தது. மேலும், வருடாந்திர அடிப்படையில், விற்பனை பதிவுகள் 66% உயர்ந்து, 3511 கோடி ரூபாயாக உள்ளது. அத்துடன், நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், நிறுவனத்தின் விற்பனை பதிவுகளின் மதிப்பு 6523.1 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டில் இது வெறும் 2845.9 கோடி ரூபாயாக பதிவானது குறிப்பிடத்தக்கது. வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்த போதிலும், இந்த நிறுவனம் லாப உயர்வை பதிவு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu