மகாராஷ்டிராவில் குய்லின்-பாரே சிண்ட்ரோம் நோய் பரவல்

February 15, 2025

மகாராஷ்டிராவில் குய்லின்-பாரே சிண்ட்ரோம் நோய் பரவல் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே மற்றும் மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் முதல் குய்லின்-பாரே சிண்ட்ரோம் (GBS) என்ற நரம்பியல் கோளாறு பரவி வருகிறது. இந்த நோய், மனிதனின் மூளை மற்றும் முதுகெலும்புக்கு வெளியே உள்ள நரம்புகளை தாக்கி, கை, கால்களில் மரத்துப் போதல் மற்றும் நீடித்த வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளைக் கொடுக்கின்றது. GBS நோய் பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்கத்தால் ஏற்படுகிறது. நோய் அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனடி […]

மகாராஷ்டிராவில் குய்லின்-பாரே சிண்ட்ரோம் நோய் பரவல் அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மற்றும் மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் முதல் குய்லின்-பாரே சிண்ட்ரோம் (GBS) என்ற நரம்பியல் கோளாறு பரவி வருகிறது. இந்த நோய், மனிதனின் மூளை மற்றும் முதுகெலும்புக்கு வெளியே உள்ள நரம்புகளை தாக்கி, கை, கால்களில் மரத்துப் போதல் மற்றும் நீடித்த வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளைக் கொடுக்கின்றது.

GBS நோய் பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்கத்தால் ஏற்படுகிறது. நோய் அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனடி நரம்பியல் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோய் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தற்போது 205 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu