இறக்குமதி கட்டுப்பாடு விலை உயரும் லேப்டாப்,டேப்லெட் பொருட்கள்

August 8, 2023

லேப்டாப், டேப்லெட், கம்ப்யூட்டர் போன்ற மின்சாதன பொருட்கள் சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இனி இவைகளை இறக்குமதி செய்ய உரிமம் பெறப்பட வேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டால் விலை உயர வாய்ப்புள்ளது. லேப்டாப், டேப்லட், கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் மூலம் தனிநபர் குறித்த தகவல்கள் கசிவதாலும், பாதுகாப்பு ஆபத்துகள் அதிகம் உள்ளதாலும் மத்திய அரசு இந்த புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி […]

லேப்டாப், டேப்லெட், கம்ப்யூட்டர் போன்ற மின்சாதன பொருட்கள் சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இனி இவைகளை இறக்குமதி செய்ய உரிமம் பெறப்பட வேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டால் விலை உயர வாய்ப்புள்ளது.

லேப்டாப், டேப்லட், கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் மூலம் தனிநபர் குறித்த தகவல்கள் கசிவதாலும், பாதுகாப்பு ஆபத்துகள் அதிகம் உள்ளதாலும் மத்திய அரசு இந்த புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி இனி இப்பொருள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதி அல்லது உரிமம் பெற வேண்டும். அவ்வாறு உரிமம் பெற்ற பொருட்களை மட்டுமே இறக்குமதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து இவை அமலுக்கு வர இருக்கின்றது. இந்த உரிமத்தை அக்டோபர் 31ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. இதனால் இறக்குமதி அளவு குறையும் நிலை உருவாகி உள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களை அதிக அளவில் உபயோகப்படுத்தும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த வாரத்தில் விற்பனை சதவீதம் சுமார் 20 முதல் 25 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆன்லைன் வர்த்த நிறுவனங்கள் விழாக்கால சலுகைகள் அறிவித்துள்ளதனால் மேலும் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் பொருள்களுக்கான விலை உயர அதிக அளவில் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu