தமிழகத்தின் முன்னணி பால் நிறுவனமான ஆரோக்கியா நிறுவனம் இன்று முதல் பால் மற்றும் தயிர் விலையை குறைத்துள்ளது.
தமிழகத்தில் ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பால் உற்பத்தி இன்று முதல் நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக 3.5% கொழுப்பு சத்துள்ள ஆவின் விற்பனை படுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து தமிழகத்தின் முன்னணி நிறுவனமான ஆரோக்கியா (ஹட்சன்) இன்று முதல் பாலுக்கு லிட்டர் இரண்டு ரூபாயும், தயிர் ஒரு கிலோவிற்கு 8 ரூபாயும் விற்பனை விலையை குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனம் விலைகளை குறைப்பதால் அண்டை மாநிலங்களை சேர்ந்த மற்ற முன்னணி தனியார் நிறுவனங்களும் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆவின் நிறுவனம் முற்றிலுமாக பால் உற்பத்தியை நிறுத்தினால் பொதுமக்கள் தனியார் நிறுவனத்திற்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.