ஜி.எஸ்.டி குறைப்பால் ஆவின் பொருட்களின் விலை குறைப்பு

September 22, 2025

இன்று முதல் ஆவின் நெய், பனீர் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைந்து, புதிய விலையில் விற்பனை தொடங்கியது. மத்திய அரசின் ஜி.எஸ்.டி குறைப்பு இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆவின் நிறுவனம் தனது பொருட்களின் விலைகளை குறைத்து அறிவித்துள்ளது. அதன் படி, ஒரு லிட்டர் நெய்யின் விலை ரூ.690 இருந்து ரூ.650 ஆகவும், 250 கிராம் பனீர் பாக்கெட் ரூ.120 இருந்து ரூ.110 ஆகவும், 500 கிராம் பனீர் பாக்கெட் ரூ.300 […]

இன்று முதல் ஆவின் நெய், பனீர் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைந்து, புதிய விலையில் விற்பனை தொடங்கியது.

மத்திய அரசின் ஜி.எஸ்.டி குறைப்பு இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆவின் நிறுவனம் தனது பொருட்களின் விலைகளை குறைத்து அறிவித்துள்ளது. அதன் படி, ஒரு லிட்டர் நெய்யின் விலை ரூ.690 இருந்து ரூ.650 ஆகவும், 250 கிராம் பனீர் பாக்கெட் ரூ.120 இருந்து ரூ.110 ஆகவும், 500 கிராம் பனீர் பாக்கெட் ரூ.300 இருந்து ரூ.275 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 50 மில்லி லிட்டர் நெய் ரூ.45, 5 லிட்டர் நெய் ரூ.3,300, 15 கிலோ நெய் ரூ.10,900 என புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆவின் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு இது பெரும் நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu