பெண்கள் கிரிக்கெட்டில் பெருமை குவித்து வரும் ஹர்மன்பிரீத் ஹவுர்

December 26, 2023

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்மன் பிரீத் கவுர் 15 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பல சாதனைகளை புரிந்து வருகிறார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கேப்டன் பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டிகளில் சத அடித்த முதல் வீராங்கனை ஆவார். இவர் சாதனைகளில் 150 டி20 போட்டிகளில் விளையாடியவர் எனும் புகழை பெற்றார். மேலும் ஸ்ருதி மந்தனாவுடன் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இணை கேப்டனாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் விஸ்டன் எனப்படும் பிரபல பத்திரிக்கை […]

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்மன் பிரீத் கவுர் 15 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பல சாதனைகளை புரிந்து வருகிறார்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கேப்டன் பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டிகளில் சத அடித்த முதல் வீராங்கனை ஆவார். இவர் சாதனைகளில் 150 டி20 போட்டிகளில் விளையாடியவர் எனும் புகழை பெற்றார். மேலும் ஸ்ருதி மந்தனாவுடன் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இணை கேப்டனாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் விஸ்டன் எனப்படும் பிரபல பத்திரிக்கை இந்த வருடத்தின் முதல் ஐந்து கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் பட்டியலில் ஹர்மன் பிரீத் கவுர் பெயரை குறிப்பிட்டிருந்தது. இவை தவிர தாக்கத்தை ஏற்படுத்திய முதல் 100 பெண்மணிகள் பட்டியலில் பிபிசி நிறுவனம் இவர் பெயரையும் அறிவித்தது. அதேபோல் டைம் பத்திரிகை வெளியிட்ட 100 நெக்ஸ்ட் பட்டியலிலும் இவர் பெயர் இடம் பெற்றுள்ளது. ஹர்மன் பிரீத் கவுர் இதுவரை 290 சர்வதேச போட்டியில் விளையாடி 6500 க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu