காந்திநகர் - மும்பை மார்க்கத்தில் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

September 30, 2022

பிரதமர் மோடி, காந்திநகர் - மும்பை மார்க்கத்தில் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. இந்நிலையில், நாட்டின் மூன்றாவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். குஜராத் தலைநகர் காந்திநகரில் இருந்து மகாராஷ்ட்ரா தலைநகர் மும்பை சென்ட்ரல் வரை இந்த புதிய வந்தே பாரத் ரயில் இயக்கப்பட […]

பிரதமர் மோடி, காந்திநகர் - மும்பை மார்க்கத்தில் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. இந்நிலையில், நாட்டின் மூன்றாவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். குஜராத் தலைநகர் காந்திநகரில் இருந்து மகாராஷ்ட்ரா தலைநகர் மும்பை சென்ட்ரல் வரை இந்த புதிய வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.

வந்தே பாரத் ரயில் வேகத்திலும், சேவையிலும், சுத்தத்திலும் மற்றும் பாதுகாப்பிலும் மற்ற ரயில்களை காட்டிலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வந்தே பாரத் ரயில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரயில் ஆகும். இதில் பயணம் செய்வதன் மூலமாக பயண நேரம் 25 சதவீதத்தில் இருந்து 45 சதவீதம் வரையிலும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வந்தே பாரத் ரயிலில் உள்ள ஒவ்வொரு பெட்டியிலும் தானியங்கி கதவுகள், இணைய வசதி, சொகுசான இருக்கை வசதி, கழிவறை வசதிகள் உள்ளது. பயணிகளின் வசதிக்கு ஏற்ப வெப்பநிலையை மாற்றிக்கொள்ளலாம். ஒவ்வொரு வந்தே பாரத் ரயிலிலும் 1128 பயணிகள் பயணிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu