மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க அமைக்கிறார் பிரதமர் மோடி

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளார். நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற்றதில் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சி 292 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் 240 இடங்களை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. இது தொடர்பாக மோடி தலைமையில் நேற்று அவரது […]

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளார்.

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற்றதில் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சி 292 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் 240 இடங்களை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. இது தொடர்பாக மோடி தலைமையில் நேற்று அவரது இல்லத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி நட்டா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும் சந்திரபாபு நாயுடு நிதிஷ்குமார் ஆகியோர் ஆதரவு கடிதம் அளித்தனர். மேலும் ஏழு சுயேட்சை உட்பட 10 எம்பிக்கள் ஆதரவளித்துள்ளனர். அதனை தொடர்ந்து வருகின்ற ஏழாம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தெரிய வந்துள்ளது. மேலும் மோடியை பிரதமராக தேர்வு செய்து அதற்கான ஆதரவு கடிதத்துடன் ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க பிரதமர் மோடி உரிமை கோருவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu